Monday, May 5, 2008

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றப் பயிலரங்கு

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் சார்பில் "தமிழ்க் கணிப்பொறி" வலைப்பதிவர் பயிலரங்கு 11-05-2008 ஞாயிறு அன்று காலை 9மணிமுதல் மாலை வரை ஒருநாள் நிகச்சியாக நடைபெறுகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலரங்கு நடைபெறும்.
பயிலரங்கில் பயிலுநர், ஒருங்குகுறி எழுத்துருவை(Unicode font)ப் பயன்படுத்திடத் தேவையான தொழினுட்ப அறிமுகம் அளிக்கப்படுவ?ர். வலைப்பூக்கள் அல்லது வலைப்பதிவுகள் மூலமாக இணைய இணைப்புச் செலவு தவிர, வேறு செலவு ஏதுமின்றி ஒருவர் தம்முடைய கருத்துகளையும், எண்ணங்களையும், படைப்புகளையும், திறனாய்வுகளையும் உலக மக்களிடம் வரிவடிவிலும், ஒலி(audio) வடிவிலும், காண்பொலி (video) வடிவிலும், படங்களாகவும்(pictures) எடுத்துச் செல்ல முடியும். அவ்வலைப் பதிவுகளை உருவாக்கவும் பயன்படுத்தவும் கையாளவும் பயிற்சி தருவதும் இப்பயிலரங்கின் நோக்கமாகும்.
விழுப்புரம் பயிலரங்கிற்கு எல்லா வகையிலும் "புதுச்சேரி வலைப்பதிவர்
சிறகம்" சார்ந்த திரு.இரா.சுகுமாரன், திரு.கோ.சுகுமாரன் இருவரும் தம் நண்பர்களுடன் பேருதவி செய்கின்றனர்.
பயிலரங்கு காலை 09.00 மணிக்குத் தொடங்கி மாலைவரை நடைபெறும். பகல் உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ் மென்பொருள் அடங்கிய குறுவட்டு (C.D) ஒன்று விலை ரூ.15\=க்குப் பயிற்சி பெறுவார்க்குத் தரப்படும். பயிற்சிக்கெனக் கட்டணம் ஏதும் இல்லை.
பயிலரங்கை அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி முதல்வர் தலைமையில் தமிழ்நாட்டு அரசு உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு முனைவர் க.பொன்முடி தொடக்கி வைக்கிறார்.
கடலூர் (BSNL) தொலைத் தொடர்பு மாவட்டத்தின் துணைப் பொதுமேலாளர் திரு.கே.இரவீந்திரனும் கோட்டப்பொறியாளர் திரு.கி.இராதாக் கிருட்டிணனும் சான்றிதழ் வழங்கி கருத்துரைக்கின்றார்கள்.
பயிற்சிபெற விரும்புவார் கீழ்க்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்க:
94434 40401, 99527 41221, 94437 36444.
மின்னஞ்சல்: thamizhanambi44@gmail.com
-விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம்


-

2 comments:

Ambur Consumer Protection Council said...

Dear sir,
Happy to know for the creation of new blog for villupuram websiter. Hope may god bless u and uplift all members.
if u give training through blog i will learn it.we also thinking of developing blog.
Good idea .
vijayuraj
acpc,Ambur
10.05.08

Unknown said...

hellow sir,

I am umesh and i also organising a blog "villupuram online"

www.villupuram2day.blogspot.com

i really happy to know that in villupuram these type of blog council is there and training is going on. best of luck and convey my wishes to all of ur group members.

sure i will support u and ur blog members.

another thing i want to know that what is futher idea about this council.

pls mail me on
villupurameffielstar@yahoo.co.in

thank u,

regards,
umesh @ effielstar